டிசம்பர் 4, 5, 6-ல் வெளுத்து வாங்க போகும் மழை... உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ....
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது .இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகியது...அது டிசம்பர் 3ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும் என எதிர்பார்க்கபடுகிறது...மேலும் இது வட மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதியில் பரவலாக கனமழை பெய்யும்....டிசம்பர் 4 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் ....சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்....டிசம்பர் 5 ஆம் தேதி மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது....
வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதி வரை இருப்பதால் சென்னையில் வழக்கமாக பெய்யும் மழை இந்த வருடம் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.....
2018 ஆம் வருடம் பருவமழை டெல்டா மாவட்டங்களில் அதிகம் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது .....

Rytu machan
ReplyDelete😍😍Thank you
ReplyDelete